search
லாகின்
வினாவிடை க்கு உங்களை வரவேற்கிறோம், இங்கு நீங்கள் கேள்விகளைக் கேட்கலாம் மற்றும் சமூகத்தின் பிற உறுப்பினர்களிடமிருந்து பதில்களைப் பெறலாம்.
0 வாக்குகள்
அதற்கன்ன காரணம் தெரிந்தால் கல்வி பயில்வோர்க்கும் எழுதுவோர்க்கும் பயனுள்ளதாக இருக்கும்.
160 புள்ளிகள்

1 பதில்

0 வாக்குகள்
இந்திய இரயில்வே  இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இது உலகிலுள்ள மிகப்பெரிய தொடர்வண்டி வலையமைப்புகளில் ஒன்றாகும். இந்திய இரயில்வேயில் ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணிக்கின்றனர்; ஆண்டுக்கு 35 கோடி டன் சரக்கானது இடம் பெயர்க்கப்படுகிறது; 16 இலட்சம் பணியாளர்கள் இதில் பணிபுரிகின்றனர். இந்தியாவிலுள்ள இருப்புப் பாதையின் மொத்த நீளம் 63,140 கிலோமீட்டர்களாகும். இது தினமும் 14,444 தொடருந்துகளை இயக்குகிறது.

தொடர்வண்டி, 1853-ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1947-ல் இந்தியச் சுதந்திரத்தின் போது மொத்தம் 42 தொடர்வண்டி அமைப்புகள் இருந்தன. 1951-ல் அவை தேசியமயமாக்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டபோது, உலகின் மிகப்பெரிய வலையமைப்புகளில் ஒன்றாக உருவானது. இந்திய இரயில்வேயால் தொலைதூர இரயில்கள், புறநகர் இரயில்கள் ஆகிய இரண்டுமே இயக்கப்படுகின்றன.
140 புள்ளிகள்