வருவாய் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 'உதய்' திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கடன் மற்றும் நஷ்டத்தை ஏற்றதன் காரணமாக மாநிலத்திற்கு நிதிச் சுமை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையை செயல்படுத்தியதன் விளைவாகவும், மத்திய, மாநில அரசுகளின் வரி வருவாயில் ஏற்பட்ட தொய்வு போன்ற அனைத்தும் வருவாய் பற்றாக்குறை உயர்வதற்கான காரணங்களாகும். மேலும் சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியங்கள் தொடர்பான செலவினங்களும் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.