பிணந்தின்னிப்பேயேயென்று...
புதுப்பெயரோ சூட்டினாய் - பின்
பரிசு தரவில்லையேன் என் நண்பா
ஈசனும் விஷ்ணும் என் கணவரென்றுரைக்கிறாய்
காரணம் கேட்டால்
கதைமிக அளக்கிறாய்
காமடியாகத்தான் போ
என்னவர் யாரென்று
இயம்பினால் போதுமே
இழுத்துவந்து நிறுத்துவேனே
இறையை வம்புக்கிழுப்பானேன்
காந்தாரி பெற்றெடுத்த கருஉருப்பெறாத பிண்டம் நீ
வெட்டவெளி நிலம் காட்டி
அம்பாரி யானைகட்டி
வீசம் படி நெல் அறுத்த
விளைச்சல்மிகு நிலமென்று
வீண்வார்த்தை இயம்புகின்றாய்
ஆலகால விஷமதனை
அடிநாக்கில் பட்டபோதும்
மிடறினில் விழுங்கிவிட்ட ஈசனோ எனைக்கண்டோடுவானென எக்காளமிடுகிறாய்...
காறி மட்டுமே உமிழ்ந்து சென்றாய் காய்ந்து போனது...செருப்பாலும் அடித்து விடு...நினைப்பாய் இருக்கட்டும்..
காம இச்சையென்றாய்..நீயென்ன பொய்யா உரைப்பாய்...பணத்தேவை என்கிறாய்..அதுவும் கூட உனது வாக்கே உண்மையென்று இருக்கட்டும்...
மகனென்ற உணர்வு தந்தாய்
சகோதரனாய் பாசம் தந்தாய்..
இன்றோ காமுகனாகவும் ...
உனது பசியென்ன உடல்பசியோ...
கிட்டாததால்தான் இச்சையோ...
நாலாயிரம் கோவில்
நான்தேடியே சென்றாலும்
இடுகாட்டு ஈசன் எனைக்கண்டால் ஓடியே விடுவானா..
பார்ததாயா நண்பா..
எனை வெறுத்த உனக்கு கூட தெரிகிறது புரிகிறது
என் தேடல் ஈசனென்று..
அவனோ அறியாமல் இருப்பான்சொல்..
மனுச ஜென்மமே நானில்லை என்றுரைத்தாய்..
மனுச ஜென்மத்தினை இறைவன் தன் வாகனமாய்க்கூட ஏற்கவில்லை
நான் மனுச ஜென்மமாய் இருக்கவோ பிறக்கவோ விரும்பவும் இல்லை..
மலம் நீ மணப்பதற்க்கில்லையென்றாய்
கர்ம ஆணவ மாயையெனும் மும்மலம் கழிக்கவே இப்பிறவி என்றானபின் மலம் என்பதை மறுப்பானேன்
வருடங்களாய் அன்பான நட்பென நம்பி ஏமாந்தவள்..சற்றே செருப்பாலும் அடித்துவிடு..புரியட்டும் மனதிற்க்குள்
இருட்டில் அமர்ந்துகொண்டு இருவிரல்களால் கண்கசக்கி
புலப்படும் ஒளிதனில் பிரம்மத்தை தேடுகிறேன் ...ஆனால் நீயென்னவோ பழிக்கிறாய்...
நரசிம்மனாய் கிழித்தெறியும் உடற்சதைக்கு உயிரூட்டி
காம வெறியோடும் காசுபண குறியோடும் நட்பென நடிக்கிறேனென..